Skip to main content
Send Your Study Materials, TLM, Videos, Articles To Aitpervai@gmail.com - Contact Us On 9597063944, 8870096077

PHONETIC ENGLISH VIDEO | UNIT 10

வாத்து கடிக்குமா🤔🤔🤔

எம் புள்ளக்கு ENGLISH வரலேனு மாய்ந்து போகும் மகா ஜனங்களே!!!!
   ஒரு பத்து நாளு, ஒரு மணி நேரம் சும்மானாச்சுக்கும் நம்ம பிள்ளைகளுக்கு, தினமும் நான் அனுப்புன வீடியோவ பாக்க விட்டிருந்தா கூட உங்க குடும்பத்துல இருக்குற எல்லார் பெயரையும் அருமையா எழுத்துக் கூட்டி வாசிக்கிற ஆர்வம் வந்திருக்கும். VILLA முதல் VILLAGE வரை இருக்குற எந்தக் குழந்தையாக இருந்தாலும் சரி.படிச்சிருப்பாங்க.

பரவாயில்ல...... விடுங்க. இலவசமா கிடைச்சதுதான. மதிப்பு அவ்ளோதான் இருக்கும். OXFORD UNIVERSITY BANNER – ல ஐஸ்வர்யாராய் வந்து “இதப்பாருங்க படிப்பு வரும்னு” சொல்லியிருந்தா வைரலாகி இருக்கும். ஐயப்பன் சொன்னா ஆயிருமா என்ன?


ஒரு தொடக்க நிலை ஆசிரியர்ட்ட OLD MECDONALD HAD A FARM EIEIO  ன்ற RHYMES க்கு படப்பதிவு பண்ணனும், நீங்கதான் முழு பொறுப்புன்னு சொன்னா எவ்வளவு யோசிப்போம்? என்னென்ன முயற்சிகள் எடுப்போம் என்று கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க.

ஆனா, இந்த UNIT – 10 ஐ எடுத்த வர்த்தினி டீச்சர் என்னடானா "விடுங்க சார், நான் பாத்துக்குறேன். அடுத்த வாரம் எங்க ஸ்கூலுக்கு வந்துருங்கனு ட்டாங்க". சரின்னு போய்ப் பார்த்தா மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில ஒரு வாத்துப் பண்ணையவே SET போட்டு எங்க எங்கருந்தோ வாத்துகளையும் கொண்டு வந்திருந்தாங்க. அசந்து போயிட்டேன்.

அடிச்ச வெயிலுல வாத்துகளையும், நம்ம செல்லக் குட்டிகளையும் நடிக்க வைக்குறதுக்குள்ள ஒரே கலவரம்தான். ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒரு தடவை வாத்துக்கு தண்ணி தெளிக்க வேண்டியதே வேலையாப் போச்சு. அப்புறம், நெசமாலுமே வாத்து கடிக்குதுங்க. அந்த வாத்துக்காரர சமாதானப்படுத்த அவர வேற நடிக்க வைக்க வேண்டியதா போச்சு.
ஒரு விஷயத்தை செயல்படுத்துவதில் ஆசிரியர் வர்த்தினியின் நேர்த்தி, நுணுக்கமான வேலைப்பாடு, அக்கறை என அத்தனையும் அருமை.

குழந்தைகளுக்குப் பாடம் நடத்தும் பாங்கு, முகவெளிப்பாடு, உச்சரிப்புத் தெளிவு அத்தனையும் ஆகச் சிறப்பு.

மாம்பாக்கம் அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தோழமை ஆசிரியர்களோடும் தலைமை ஆசிரியரோடும் ஒருங்கிணைந்து, ஆக்ஸிஜன் குடுவையை முதுகில் சுமந்து சிகரம் நோக்கி நகரும் மலையேறி போல சுமைகள் தாங்கி, மூன்று பாடல்களுக்கு முகத்துவாரம் அமைத்து இருந்தார். இவரது பெயர் கூட இப்பொழுது இங்கே குறிப்பிட்டதால் தான் உங்களுக்கே அறியப்பட்டிருக்கும்.

 திறமையுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களை உற்சாகப் படுத்த வேண்டும். தூண்டுகோல்கள் துவண்டு விட்டால் திரிகள் கூட சுடராது கருகி விடும்.

மிகைப்படுத்தப்படும் சந்த அலங்காரங்களுக்காக இங்கு நான் பல ஆசிரியர்களைப் புகழ்ந்து குறிப்பிடவில்லை. சத்தமில்லாமல், சுயநலமில்லாமல், T.A & D.A ஏதுமில்லாமல் தத்தம் சொந்தப் பணத்தைச் செலவிட்டு ஒரு பயனுள்ள படைப்புகளைத் தந்து விட்டு யாருக்குமே தெரியாமல், தம் பணியைத் தொடந்து கொண்டிருக்கும், இந்த நல் உள்ளங்களுக்கு வாழ்த்தும் ,நன்றியும், கௌரவமும் சேர்ப்பதற்காக மட்டுமே விடாது கருப்பாய் உரத்து உரைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த PHONETICS முறை தமிழக அனைத்துப் பள்ளிகளிலும் இந்த வருடம் கொண்டு வரப் போராடுவோம் என்று ஊக்கமூட்டி நம்மை விட்டு பேரதிர்ச்சியாய் இறையடி சேர்ந்த நண்பர் ஜெயா வெங்கட் அவர்களுக்கும் இந்நேரத்தில் இதய அஞ்சலி சமர்ப்பணம்.


அமலன் ஜெரோம்
படப்பதிவு இயக்குநர்

Comments

Popular posts from this blog

Std 1 - Term 2 - QR Videos - Tamil - Page 1

1 std - Term 3 - Tamil QR Videos - Page 1

மானின் விடுதலை - 3rd STD TERM 3 VIDEO LESSON