WORD CARDS எனும் மந்திரம்
-------------------------------------------------
Unit - 6 ஐ நடத்தி முடித்திருக்கும் போது ஆறே நாட்களில் மிகப்பெரிய கற்றல் விளைவுகளை மாணவர்களிடத்தில் காண முடியும்.
குறைந்தது 200 ஆங்கில வார்த்தைகளையாவது வாசிக்கும் திறன் தானாக வந்திருக்கும்.ஆங்கில எழுத்துகளின் ஒலியை மாணவர்கள் உள் வாங்கியிருப்பர்.ஆங்கிலம் குறித்த பயம் போயிருக்கும்.
இந்த ஆறு நாட்கள் தான் ஆசிரியர் மிகக் கவனமாக உடனிருந்து சரியான ஒலிப்புடன் ஆர்வமாகக் கற்றுத் தர வேண்டிய நாட்கள்.இதில் மட்டும் சிரத்தை எடுத்து விட்டால் இம்முறை வெகு எளிதில் கைதேர்ந்து விடும்.இந்த unitகள் சரியாகக் கற்றுத் தராத எவருக்கும் இம்முறை வழக்கம் போல் கடினமான, சம்பிரதாயமான முறையாகவே இருக்கும்.
இந்த 6வது unit முடிந்தவுடன் முக்கியமாகத் தேவை மாணவர்களுக்கான WORD CADRS Book.இதைப் பயன்படுத்தும் போது மாணவர்களின் வாசிக்கும் திறன் வானளாவ உயர்ந்து நிற்கும்.மாணவர்கள் ஒவ்வொருவரின் கையில் இருக்கும் போது வாசிப்பும்,துல்லியமான உச்சரிப்பும்,ஆசிரியர்களின் வெற்றியும்,பெற்றோர்களின் பாராட்டும் தவிர்க்கப்பட முடியாததாகி விடும்.
இந்த word cardsன் colour PDF fileஐ பின்னர் link பண்ணுகிறேன்.இந்த Book வடிவில் உள்ள word cards தொகுப்பை எப்படியாவது பெற்று குழந்தைகள் கையில் கொடுத்துப் பாருங்கள்.ஒவ்வொரு பெற்றோருமே குழந்தைகள் கற்றலில் ஆச்சரியமடைவார்கள். தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளிக் குழந்தைகளின் வாசிப்புத் திறனில் 100% திருப்தி அடைவார்கள்.
Phonetics DVD மற்றும் word cards books வேண்டும் என்று நிறைய விசாரணைகள்,நிறையத் தேடல்கள்.
பார்ப்போம்...மாநில அளவிலோ அல்லது அந்தந்த மாவட்ட அளவிலோ யாரேனும் நல்ல உள்ளங்கள்,பெரிய நிறுவனங்கள், அரசுப் பள்ளிகளில் அக்கறையுள்ள வெளிநாட்டு வாழ் நல்லுள்ளங்கள்,IT கம்பெனிகள் யாரேனும் முன்னெடுத்து செய்ய வாய்ப்பிருந்தால் ஒரே வருடத்தில் கற்றலின் தரம் 50% அரசுப் பள்ளிகளில் முன்னேறி விடும்.
யாரேனும் முன் வருபவர்கள் இருந்தால் அவர்களிடம் இத்தகவலை எடுத்துச் செல்லுங்கள். நமக்கு நாமே செய்யும் முயற்சியால் நாடு நலமடையட்டும்.யாரேனும் முயற்சி எடுத்து நீங்களே இந்த நற்செயலைச் செய்யுங்கள்.நல்லார் ஒருவர் உளரேல் ஏழைக் குழந்தைகள் எல்லோரும் கல்வி பெறட்டும்.
மாற்றத்தின் முகவரியாய் உங்கள் ஊடகத் தளங்களில் இதைப் பதிவாய்த் தடம் பதித்து,அனைவருக்கும் பகிர வேண்டுகிறேன்.
Pls Share to all.
Comments
Post a Comment