என்னால் முடியும்...
--------------------------------முகநூலிலும்,வாட்ஸ் அப்பிலும் முகம் காட்டாத எத்தனையோ ஆசிரியப் பெருமக்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளுக்காய் சப்தமில்லாமல் கல்வியையும், பாசத்தையும் சரிவிகிதமாய் ஊட்டியபடி உயிர்த்துடிப்புடன் தன் பணியைச் செவ்வனே செய்து வருகின்றனர். ஆனால் இவர்களது பணியோ ,கடமையோ ஒரு கைதட்டல் கூட இல்லாத அங்கீகாரத்தோடு ஓய்வு பெற்று விடுவது தான் காலத்தின் கொடுமை. கல்வித் துறையின் கை தொடா நனவு.திறமையுள்ள இவர்களை உள்ளூர் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் தானே தனித்துவமும் ,சுயதிறமையும் உலகளாவிப் பரவும். இதையெல்லாம் பொருட்படுத்தாத இந்த ஆசிரியச் சொந்தங்கள் நொடி முட்களாய் தங்கள் பணியில் சுழன்று கொண்டேயிருக்கிறார்கள்.
Phonetics படப்பதிவுப் பணியில் ஐயப்பன் ஆசிரியர், முதல் 6 unit களை எடுத்த பின் 7 வது unit ஐ யார் முதலில் எடுப்பது என்ற கேள்வி ஒரு தயக்கமான தேடலாக அமைதி ஊர்வலம் நடத்தியது.நான் எடுக்கிறேன் சார் என்ற தைரியமான முதல் குரலுக்குச் சொந்தமான ஆசிரியர் தான் திருமதி.G,சித்ரா MSC,B.ed அவர்கள்.
ஆழ்ந்த நுட்பம், ஆரவாரமில்லா அணுகுமுறை, தெளிவான முன்நகர்வு என்ற பல பரிமாணங்களோடு தான் எடுத்துக் கொண்ட ஆங்கிலப் பாடத்தை வெளிக்கொணர பெருமுயற்சி எடுத்துக் கொண்டவர்.
குழந்தைகளுக்கு முன்னும்,ஆசிரியர்களுக்கு முன்னும் பாடம் நடத்துவது வேறு.நடிப்பது என்பது வேறு. ஆனால் எதைப் பற்றியும் பெருவிசயமாக எடுத்துக் கொள்ளாமல் எல்லோர் பயத்தையும் போக்கும் முன்னுதாரமாக நடத்தி,நடித்து முடித்தார்.படக்குழுவினர் பாராட்டையும் பெற்றார்.
ஆமூர் நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணி புரிந்து வரும் இவரது பள்ளியில் எடுத்தது தான் இப்பாடலும் கூட, முழு ஒத்துழைப்பும் இவர்தான். இந்த project முழுவதற்கும் உதவி இயக்குனர் போல் எல்லாப் பணிகளையும் சிரமேற் கொண்டு செய்து முடித்தவர்.
மிகை அலங்காரத்திற்காக நான் எதையும் சொல்ல வில்லை.வீட்டுக் கடமைகளையும் செய்து,பணிக்கான அலுவல்களையும் செய்து,அதையும் மீறி சாதனைக்காக நேரங்களை செலவிடுவது ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு சாதாரண விஷயமல்ல.படப்பதிவு இறுதிக்கட்டத்தில் இரு சக்கர வாகன விபத்தில் கணுக்காலில் அடிப்பட்டு மிகப்பெரிய தொகையையும், இன்னல்களையும் சுமந்தாலும் இந்த project வெளிவர தன்னாலான அத்துனையும் தியாகித்தவர் சித்ரா ஆசிரியர் அவர்கள்.
அவருக்கும் ,அவர் குடும்பத்தாருக்கும் அரசுக் குழந்தைகளின் ஆசீர் என்றென்றும் தென்றலாய் வாழ்த்துகளாய் வருடிக்கொண்டே இருக்கும்.
இதுவரை யாராலும் வாழ்த்தப் பெறாத அவருக்கும் நம் எல்லோரின் சார்பான வாழ்த்துகள்.
இந்த unit -7 ன் கெளரவம் முழுதும் அவர்க்கே உரியதாகட்டும்..
Comments
Post a Comment