Skip to main content
Send Your Study Materials, TLM, Videos, Articles To Aitpervai@gmail.com - Contact Us On 7200511868

Phonetic English video-Phonetic Unit 5

பேராபத்து...
---------------------


Phonetic method முதல் நான்கு unit இதுவரை தினமும் பகிர்ந்து வந்துள்ளேன். நிறைய அலைபேசி அழைப்புகள்.உண்மையாக இதன் வெற்றியை உணர்ந்தவர்கள்,அரசுப் பள்ளிகளை நேசிப்பவர்கள்,மாணவர்களிடம் அதீத வெற்றிகளைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தவர்கள் ரெம்பவே நெகிழ்ந்து பேசினார்கள்.share and like face bookல் கொடுத்துள்ளார்கள். படுத்தியுள்ளார்கள்.உரமூட்டியுள்ளார்கள்.

இது ஒருபுறம் இருக்கட்டும்.அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்த்து 38,000 பள்ளிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. 2,00,000 ஆசிரியர்கள் இருக்கலாம்.எத்தனை பேர் இந்த விஷயத்தில் அக்கறை எடுத்து இதைப் பார்த்திருப்பார்கள்? எத்தனை பேருக்கு பகிர்ந்திருப்பார்கள்? இதைப் பற்றி கலந்தாலோசித்திருப்பார்கள்?

வெறும் 2 % மட்டுமே இருக்கும்.மீதி 98% பேருக்கு எப்படி எட்டும்.Technology இன்னும் கைப்பட வில்லையா?எப்படி இருந்தா என்ன,யார் கேட்பா என்ற அலட்சியமின்மையா?சமூகப் பொறுப்பின்மையா?  தெரியவில்லை என்ற முனகல்களுக்கு உடன்பட மறுக்கிறது மனது.தனது குழந்தைக்கு school admission or college admissionக்கு எவ்வளவு தேடுகிறோம்.பிடித்த சேலையோ,பொருளோ வாங்க எவ்வளவு விசாரிக்கிறோம்.ஆனால் தன்னையே நம்பியுள்ள குழந்தைகளின் தேடலுக்கு என்று கிழக்காய் விடியப் போகிறோம்.

தற்போதைய ஆசிரியர்களின் நிலைமை ICU வில் இருக்கிறது.ஆசிரியர்களின் ஊதிய உரிமைகள் பறிப்பு,கார்ப்பரேட் பள்ளிகளின் பிரமாண்ட வளர்ச்சி,ஆங்கில மோகத்தில் கொத்து கொத்தாய் மடியும் நடுத்தர வர்க்கம்,ஊடகங்களின் நகையாடல்,மாணவர்களின் அபரிமிதமான அறிவு வளர்ச்சி, மின்னணுப் பொருட்களைக் கையாளும் எளிமை....என எல்லாமே கழுத்திலிறங்கும் கத்தியாய் தருணம் நோக்கிக் காத்திருக்கின்றன.

பழைமை வேறு. பழசு வேறு. பழைமை இருக்கட்டும்.இன்னும் எத்தனை நாள் தெரிந்து வைத்த பழசை மட்டுமே காலம் தள்ள முடியும்.

ICT, Internet,Android,App Applications,E-,Learning என்று உலகம் வேறு பாதையில் பயணிக்கிறது. இதெல்லாம் எனக்குத் தெரியாது என்று இனி சொன்னால் பச்சைக் குழந்தை கூட பல்லிளிக்கும்.
மூன்று நாட்களுக்கு முன்னால் ஏழாம் வகுப்பு மாணவிகள் சிலர், தன் வகுப்பு ஆசிரியருக்கு பாடம் நடத்தத் தெரியவில்லை,நாங்கள் வேண்டுமானால் அவர்க்கு எடுத்துக் காட்டுகிறோம் என்று அனைத்து ஆசிரியர்களுக்கு முன் பேசியதாக  ஒரு ஆசிரிய நண்பர் ஆதங்கப்பட்டு அரற்றினார்.

மாற்றத்திற்கு நாம் மாறவில்லை எனில் எதிர்பாராத மனஅழுத்தம் இனி தினம் தினமே.

அடுத்த ஆண்டு தொடக்க வகுப்புகளுக்கு இப்போதே தயாராகவே இந்த வீடியோக்கள்.தயவுசெய்து இப்போதே நடத்திப் பாருங்கள். இதோடு இணைத்து  supporting materials link பண்ணுவோம்.Youtubeல் SUBSCRIBE பட்டன் அழுத்தி,Bell பட்டனை அழுத்தினால் அனைத்து வீடியோக்களும் தானாகவே உங்களுக்கு வரும்.
எல்லோருக்கும் Forward, Share பண்ணுங்கள்.ஒரு கிளிக்கில் ஓராயிரம் குழந்தைகளின் கல்வி புதைந்திருக்கிறது.very simple method.

சொன்னது யார்?இதற்கு என்ன தகுதி உண்டு என்ற கேள்விக் கணைகளைத் தவிர்த்து நேர்மறை சிந்தனையோடு  இதைப் பற்றியே பேசுவோம்.இதைப் பற்றி வழி தொடர்வோம்.ஜெயிப்பது நிஜம்.


Comments

Popular posts from this blog

வானவில் மன்றம் - Vanavil Mandram - Physics Experiment Videos - நீர் தெளிப்பான்

 

SMC Re-Constitution - CM Speech - Video

 

நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) Movie - Direct Download Link