Skip to main content
Send Your Study Materials, TLM, Videos, Articles To Aitpervai@gmail.com - Contact Us On 7200511868

PHONETIC ENGLISH VIDEO | UNIT 12

விருது பெற என்ன தகுதி
-------------------------------------------
ஐயப்பன் சாரை உங்களுக்கு நல்லாவே தெரியப் படுத்தியாச்சு.சரி...அவர் சிஷ்யர் யாரு தெரியுமா.. இந்த 12- வது unit எடுத்துகிட்டுருக்கிற ஞானசேகர் சார் தான் அவரு.செம டேலன்ட்ங்க.phoneticsஐ ரெம்ப ஈஸியா பசங்களுக்கு சொல்லித் தந்திடுவாரு.





சுவர் முழுதும் ஓவியங்கள் வரைய ஐடியா,பாடங்களை எப்படிப் பிரித்து step by stepஆ வகைப்படுத்துவது,எல்லா ஆசிரியர்களுக்கும் எந்த சந்தேகம்னாலும் ஒத்தாசையா இருக்கிறது எனப் பல அவதாரங்கள் shooting spotல.

அப்புறம் ஏழை மாணவர்களுக்கு இலவசப் பயிற்சிகள் தவறாது கொடுத்து வருபவர் ...இன்னும்.மீனவ குப்பங்களில் இவரளித்து வரும் இலவச மாலை நேரப் பயிற்சிகளால் இது வரை நூறு விழுக்காடு வெற்றி தடை பட்டதேயில்லை.

இந்த phonetics பயிற்சிய மாநிலம் முழுதும் கொடுக்கணும்னு சொன்னாலும் பக்காவாக plan போடுற பக்குவம் உள்ளவர்.

கடற்காற்றின் வாசமும்,இவரது நேசமும் தான் எங்களது சாயங்காலத்தை சந்தோஷங்களாய் மடை மாற்றின.ரொம்பன்னா ரொம்பவே... எத்தனை கஷ்டங்களுக்கும் அப்பாற்பட்டு இந்த விஷயங்களுக்காக, குழந்தைகளுக்காக அக்கறைப்பட்ட நல்ல மனுஷர்.

எந்தப் பாடமாக இருந்தாலும் குழந்தைகளுக்கேற்றவாறு, எளிமையாக மாற்றும் புதுப் புது உத்திகளின் மொத்தக் குவியல் இவர்.

எத்தனையோ அமைப்புகளும்,கல்வித்துறையும் கண்டு கொள்ளாமல் கடந்து போன ஒரு கல்விச் சிகரம் இவர்.

நிறையத் திறமையும்,நேர்மையும் இருந்தால் அடுத்த நிலை அதிகாரிகளால் அழுத்தமும்,மன உளைச்சலும் தான் அதிகம் தரப்படுகிறதே தவிர வெளிச்சப் படுத்தப் படுவதில்லை.ஒரு சில அதிகாரிகளே இதற்கு விதிவிலக்கு.

இவர் பயன்படுத்தப் பட்டிருந்தால் இந்த மூன்றாண்டுகளில் அட்லீஸ்ட் ஒரு மாவட்டமே ஆங்கில phonetics ல் சிறந்து விளங்கியிருக்கக் கூடும்.

இத்தனை தகுதிகளுக்கும் தராசு முள்ளாய் முடி சூடியிருக்கும் இவருக்கு யார் அவார்டு கொடுத்து அங்கீகரிக்கவில்லை என்றால் என்ன நாமாவது வாழ்த்துகளால் நனைய வைப்போம்.

மறக்காம ஒரு comment,like and Share கொடுங்க.இது போதும்.இதுவே நிறைவு.

இனியாவது விருதுகள் வழங்கப்பட வேண்டும்.வாங்கப்படக் கூடாது.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் பற்றி பள்ளிக்கல்வி அமைச்சர் "நச்" பதில் - எவ்வளவு பாராட்டினாலும் பொருந்தும் - Video

 

1 To 5th November CRC - Agenda, Time Table, PPT & Training Videos

 

SMC Re-Constitution - CM Speech - Video