நிறைகுடம்
-------------------
-------------------
தனியார் பள்ளிகளின் தலைமைப் பண்புகளில் எனக்குப் பிடித்தது பிறர் திறமையைப் பாராட்டுதல் மற்றும் அங்கீகரித்தல்.
தன் பள்ளி சார்ந்த ஆசிரியராக இருக்கட்டும் அல்லது மாணவராக இருக்கட்டும். ஏதாவதொரு சின்னச் சின்ன சாதனைகள் புரிந்தாலோ அல்லது புதிய படைப்பளித்தாலோ பாராட்டுகள் குவியும்.உதவிகள் தொடரும்.
ஆனால் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் செய்யும் மகத்தான சாதனைகள் கூட மங்கலாகத் தான் தெரிகின்றன அல்லது உறுத்தலாகத் தான் பார்க்கப் படுகின்றன.நிறையத் திறமைசாலிகள் எல்லாம் பாக்கியசாலிகளாக இல்லாததால் அவர்களின் திறமைகள் குன்றின் மேல் தீபமாய் ஜொலிக்காமல் நான்கு சுவர்களுக்குள் கட்டம் கட்டி இருட்டடிப்பு செய்வதாகவே முடிந்து விடுகிறது.
Phonetic methodன் Unit 8 வகுப்பெடுத்த ஆசிரியை திருமதி.தனலெஷ்மி அவர்களும் வெளியே அலட்டிக் கொள்ளாத ஒரு திறமைசாலி.திறமைகள் கொட்டித் தீரா நிறைகுடம். யாரிடமும் அனாவசியம் பேசியதில்லை.ஆனால் குழந்தைகளிடம் பேசுவதில் வசியம் வசிக்கும்.
ஒரு விஷயத்தை முன்னிறுத்தி பாடம் நடத்த முன் தயாரிப்பு முக்கியமென முனைந்திருப்பவர் இவர்.முன்தயாரிப்பில் நிறைய மெனக்கெடுவதால் காட்சிப் படுத்துதலில் எளிமையாய் வீரியப்படுத்துவார்.
வெகு தொலைவிலிருந்து பயணப்பட்டு வர வேண்டும். தாமதமானதில்லை.
வேலைகளோ மிக அதிகம்.முகம் சுழித்ததில்லை.பெரியவர்,சிறியவரென்ன.மரியாதை குறைத்ததில்லை.
வேலைகளோ மிக அதிகம்.முகம் சுழித்ததில்லை.பெரியவர்,சிறியவரென்ன.மரியாதை குறைத்ததில்லை.
இவரது இரண்டு வயதுக் குழந்தை கிணற்றில் தவறி விழுந்த செய்தியறிந்து தவித்த ஒரு நிகரில்லா தாய்மையின் தவிப்பிற்கு, படக்குழு மொத்தமும் கண்கள் கசிந்தது. எத்தனையோ குழந்தைகளுக்காக இவரீந்த தியாகம் இவரது குழந்தையை எவ்வித ஆபத்தின்றி மீட்டு புண்ணியமாக்கியது.
இருந்தாலும் இந்த project முழுமை பெற எல்லாம் தாங்கியபடி அசுரத்தனமாய் உழைத்தார்.இதில் அமைந்துள்ள பாடலும் அவர் பணிபுரிந்த திருப்போரூர் ஊ.ஒ.து.பள்ளியில் அவர் மேற்பார்வையில் எடுக்கப் பட்டது தான்.
ஆசிரியர் தனம் அரசுப்பள்ளியின் வரம்.
மனமிருப்பவர்கள் பாராட்டலாம்...
பிராத்திக்கலாம்..
மனமிருப்பவர்கள் பாராட்டலாம்...
பிராத்திக்கலாம்..
Comments
Post a Comment