திருப்போரூர் ஒன்றிய இடைநிலை ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்போடும்,அர்ப்பணிப்போடும் இம்முறை பாட அலகுகளாக்கப் பட்டது.
கண்ணன் மற்றும் ஞானசேகர் ஆசிரியர்கள் சூலேரிக்காட்டுக்குப்பம் என்ற கடற்கரை ஓரப் பள்ளியைத் தெரிவு செய்தார்கள்.
அனைவரும் இணைந்து பல விதமாகத் திட்டமிட்டோம்.பலநாட்கள் இரவு பகல் பாராமல் வகுப்பறையை English Lab போல ஓவியங்களால் வடிவமைத்தோம்.
தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் இன்று காணப்படும் வகுப்பறை ஓவியங்களின் முன்னோடி இந்த வகுப்பறை தான்.
ஆசிரியர் கண்ணன் இதை சிறப்பாகச் செய்து முடித்தார்.மகாபலிபுரம் கடற்கரை அருகில் ஆங்கில படப்பதிவுக்காக உருவான வகுப்பறையை நீங்கள் இதில் பார்க்கலாம்.script, Location, preparation போன்றவற்றை உருவாக்கவே 2 மாதங்கள் யாருமே தூங்கவில்லை.
தொடக்கக் கல்வித் துறையில் இணை இயக்குநராக இருந்த திருமதி. லதா அவர்கள் தான் இத்திட்டத்தின் ஆணிவேர்.படைப்பாளிக்கு கொடுக்க வேண்டிய அங்கீகாரத்தையும்,சுதந்திரத்தையும் எனக்குக் கொடுத்தார்கள்.
எனது பக்கபலமான தொழில்நுட்பக் கலைஞர்களோடு களம் இறங்கினேன்.அந்தோணி,ஜான் கேமரா.வின்சி அண்ணன் எல்லா வித உதவிகளும் செய்தார்.
ஒரு சினிமா எடுக்க என்னென்ன விஷயங்கள் தேவையோ அந்த தொழில்நுட்பத் தரத்தை மனதில் கொண்டு,குழந்தைகளுக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என்ற ஈடுபாட்டோடு ஒவ்வொரு நிமிடமும் உன்னிப்பாக இருந்தோம்.
அனுபவம் ஒவ்வொரு நாளும் தொடரும்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே உதவி தான்.எப்படியெல்லாம் பகிர முடியுமோ எல்லோருக்கும் பகிருங்கள்.
இதில் பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய ஆசிரியர்களின் உழைப்பினாலும்,தியாகத்தினாலும் மட்டுமே இந்த வெற்றி சாத்தியம்.முதல் நன்றிகள் இவர்களுக்கும்,ஐயப்பன் மற்றும் அமலன் ஜெரோம் ஆசிரியர்க்கும்...
Phonetic method -இன் முதல் unit இது
மாணவர்கள் எளிய முறையில் வகுத்தல் கணக்குகள் செய்ய வைக்கும் முறை -ரூபி ஆசிரியர்
ReplyDeletehttps://tamilteachersworld.blogspot.com/2018/07/easy-way-to-learn-division-taught-by.html
மாணவர்கள் எளிய முறையில் பெருக்கல் கணக்குகள் செய்ய வைக்கும் முறை -ரூபி ஆசிரியர்
https://tamilteachersworld.blogspot.com/2018/07/blog-post_68.html
மாணவர்கள் எளிய முறையில் கழித்தல் கணக்குள் செய்ய வைக்கும் முறை -ரூபி ஆசிரியர்
https://tamilteachersworld.blogspot.com/2018/07/blog-post_45.html
மாணவர்கள் எளிய முறையில் கூட்டல் கணக்குகள் செய்ய வைக்கும் முறை -ரூபி ஆசிரியர்
https://tamilteachersworld.blogspot.com/2018/07/blog-post_16.html
வாவ் அருமை https://tamilteachersworld.blogspot.com/2018/07/blog-post_16.html
ReplyDelete