Skip to main content
Send Your Study Materials, TLM, Videos, Articles To Aitpervai@gmail.com - Contact Us On 7200511868

Phonetic Video Unit 2





ஐயப்பன்...இவரைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தன்னிடம் படிக்கின்ற பிள்ளைகள் ஆங்கிலத்தில் சரியாக உச்சரிக்க தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.இடைநிலை ஆசிரியராகப் பணி புரிந்த காலத்திலிருந்து இன்று வரை உச்சரிப்பு பயிற்சி மூலம் காண்போரை விழி விரிய வைப்பவர்.phonetic DVD யின் பிதாமகன்.

ராத்திரி பகலாய் ஆங்கில உச்சரிப்புக்கு தன் வாழ்நாளையே கழித்ததால் என்னவோ ஊடகங்கள் இவரைக் கொண்டாடவில்லை.இவர் பயிற்றுவித்த ஏழைக் குழந்தைகள் சரியான உச்சரிப்பைப் பேசுவதால் பகட்டான உலகின் பார்வைக்கு இவர் படவில்லை.மக்கு என்று நாம் கருதும் எந்தக் குழந்தையையும் 30 நாட்களில் ஆங்கிலம் வாசிக்க வைக்கும் இவரது நுணுக்கங்கள் அரசு ஆசிரியர் என்ற காரணத்தினாலோ என்னவோ பரவலாக்கப் படவில்லை.
தான் கற்றதனைத்தையும் தமிழகக் குழந்தைகளுக்காக வடிவமைத்த இவரின் அணுகுமுறையை யாரும் அணுகவே இல்லை.

இவர் மேலும் கொஞ்சம் தவறு இருக்கத்தான் செய்கிறது.
ஆங்கிலோ இந்தியனாகப் பிறக்காமல் தமிழனாகப் பிறந்து விட்டார்.ஒரு ஊடகம் பல இலட்சங்களுக்கு இம்முறையை விலை பேசிய போது,இது அரசுக் குழந்தைகளுக்கானது என்று மறுத்து வியாபாரம் பேசாதது தவறு தானே.முன்னிருத்தப்பட
வெள்ளைத் தோலிலும்,ஆடி காரிலும் பயணிக்காததும் பெரிய தவறல்லவா.தன்னைத் தானே விளம்பரப் படுத்திக் கொள்ளத் தெரியாத அரசு ஆசிரியராய் இருந்ததும் ஒரு தவறாக இருக்குமோ.

இவரைப் போன்ற திறமைகளின் உச்சம் அரசுப் பள்ளிகளில் இருந்தும் அதிகம் பயன்படுத்தப்பட வில்லையே என்ற ஆதங்கத்தின் உரசல்களே மேற்கூறிய உமிழ்வுகள்.

பல ஆண்டுகளான தன் உழைப்பாலும், தொடர் பயிற்றுவிப்பாலும் போராடி,கல்வித்துறையின் கவனத்தை ஈர்த்தவர் தலைமை ஆசிரியர் ஐயப்பன் அவர்கள். தான் திறம்படக் கற்ற ஆங்கிலத்தை phonetic முறையைக் கையாண்டு குழந்தைகளுக்கு ஏற்றவாறு வடிவமைத்தவர்.இவர் பயற்சி தந்த குழந்தைகளின் ஆங்கில உச்சரிப்பு பிரிட்டன் குழந்தைகளின் உச்சரிப்புக்கு இணை என்று வியந்து பேசப்பட்டது.

Shooting நடக்கும் ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கே எழுந்து விடுவார். இரவு 12 மணி வரை உச்சரிப்பு முறை பற்றிய அலுவல்களையே பற்றியிருப்பார்.குழந்தைகளை location அழைத்து வர தினம் தினம் இவர் எடுக்கும் போராட்டங்களும்,வேதனைகளும் கண்களில் நீரை வரவழைக்கச் செய்யும்.சாப்பாடு எடுத்து வர வசதியில்லாத ஏழைக் குழந்தைகளுக்கு இவரே காலை இன்னும் முன்னதாகவே எழுந்து விறகடுப்பில் சமைத்து எடுத்து வரும் ஏழ்மை அதை விடக் கொடுமை.எத்தனை டேக் என்றாலும் அசராத சிங்கம்.எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கும் நாணல்.

43 நாட்கள் மட்டுமே இவரது நடைமுறையைப் பின்பற்றி வகுப்பறையில் போதிக்கப் பட்டால் அடிப்படைத் திறனான படித்தல் திறன் பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை.அசால்ட்டா படிச்சிட்டு ஜாலியா போய்ட்டே இருப்பாங்க நம்ம பிள்ளைங்க.ஒன்றாம் வகுப்பு பிள்ளைங்க குறைந்தது 5000 ஆங்கில வார்த்தைகளை வாசிக்காமல் போக மாட்டார்கள்.

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு அரசுப் பள்ளிக் குழந்தைகள் ஆங்கிலம் வாசிக்கவில்லை என்று அலுத்துக் கொண்டால் எங்கிருக்கிறது தவறு ?

ஒரு சின்ன challenge.இவரிடம் ஒன்றுமே அறியாத பள்ளி வயதுக் குழந்தைகளை ஒப்படையுங்கள்.10 நாட்களில் அந்தக் குழந்தைகள் நிச்சயமாக ஆங்கில எழுத்துகளை சரியான உச்சரிப்புடன் வாசித்தே ஆகும்.இதற்கு மேல் நான் என்ன சொல்ல?

காது கேளாதோர் உலகில் ஒரு வீணை இசைத்துக் கொண்டே இருக்கிறது.

உங்கள் வகுப்பறைகளிலாவது உங்களால் இந்த வீணையின் நாதம் நுகரப்படட்டும்.

அனுபவம் தொடரும்...
அமலன் ஜெரோம்
படப்பதிவு இயக்குநர்




Comments

Popular posts from this blog

வானவில் மன்றம் - Vanavil Mandram - Physics Experiment Videos - நீர் தெளிப்பான்

 

SMC Re-Constitution - CM Speech - Video

 

நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) Movie - Direct Download Link