Skip to main content
Send Your Study Materials, TLM, Videos, Articles To Aitpervai@gmail.com - Contact Us On 7200511868

English Phonetic Video- Unit 14


அதென்ன உலகத்துல இல்லாத அதிசயமா இந்த phonetic DVD ன்னு நீங்க கேக்கலாம். யாருக்குமில்லாத அக்கறை உனக்கெதுக்குன்னும் கேக்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிக் குழந்தைகள் பயமில்லாம,சரியான உச்சரிப்போட முதல் பருவத்திலேயே ஆங்கிலம் கற்றுக்கொள்ள இதை விட best method இனிமே கண்டு பிடிச்சா தான் உண்டு.Teachers க்கும் ஒரு வாரம் தான் கஷ்டம்.அப்புறம் teaching very easy.
DVD இருக்கு.word cards book இருக்கு.Flash cards இருக்கு.எல்லாமே well planned. But பயன்பாடு தான் doubt.


ஒரு இயக்குநரா எவ்ளோ பிரச்சினைகளை தாண்டி வந்திருக்கோம்னு சொல்லுறேன்.சினிமாவுல direction team,cinematography, make up, catering, dance choreograph,art, sound,dubbing,editingன்னு 23 union இருக்கும். அதே மாதிரி work தான்.ஆனா இந்த எல்லாத் துறைகளையும் ஒரே ஆளு co ordinate பண்ணனும்.யோசித்துப் பாருங்க.பணமும் கம்மி.அதிகாரமும் இல்ல.யாரும் நடிகர்களும் கிடையாது.எல்லாருக்கும் சொல்லித் தந்து நடிக்க வைக்கணும்.ஒரே ரூம்.ஒவ்வொரு unitலயும் ஒவ்வொரு மாதிரி உட்காரும் chair arrangementsஏ மாறிருக்கும்.ஒருத்தரையும் மறைக்காம arrange பண்ணனும்.மண்ட காஞ்சிரும்.வேற ஒரு சொந்த வேலையும் பாக்க முடியாது.தினம் தினம் தினுசு தினுசா பிரச்சினை வரும்.கழிவறை வசதிகளின்மை கூட மனச் சோர்வையும், சங்கடத்தையும் கூடவே அள்ளித் தெறித்தது.

ரெண்டு வருஷம் தவமா தவமிருந்தோம்.இது phonetics இல்ல "பொண"டிக்ஸ்ன்னு கிண்டல் பண்ணுவாங்க.

ஏன்னா...இதன் Photoshop designer தேவேந்திரனின்  அப்பா shooting இடையில்  இறந்து போயிட்டார்.next month cameraman ஆண்டனி அப்பா இறந்து போயிட்டார்.அடுத்து script எழுத முழுக்க துணையிருந்த என் உயிர் நண்பன் ஆசிரியர் அர்விந்த் வோட அப்பா...காலைல 3 மணிக்கு அவர் அப்பா இறந்திட்டார்னு போன்.நான் தான் call attend பண்ணினேன்.விசயத்தைச் சொல்ல என் நணபன் தனியாக அழுது கொண்டேருந்தான்.அந்த வலி,பேரிழப்பு இந்த projectக்காகத் தான்.அதற்கடுத்த மாதம், ஒருநாள் கூட விடுப்பே எடுக்காமல்  உதவி இயக்குநராய் உழைத்த ஜானின் அப்பாவின் மறைவு.அடுத்து என் தாத்தாவின் மறைவு.இவ்வளவு சோகங்களையும் அடுத்தடுத்து தாங்கி,ஓரிரு நாட்களில் சரியாகி மீண்டுமாய் மீண்டு போராட்டத்தைத் தொடர்வோம்.யாருக்குமே சொல்லப் படாத பாறாங்கல் பாரங்களை இப்பொழுது தான் இங்கு இறக்கி வைக்கிறேன்.

Technical sideல இருந்து ஒரு குறை கூட சொல்ல முடியாது. நல்லா வர வேண்டும் என்று சொந்தப் பணத்தை இலட்சம், இலட்சமாய் இறைத்திருக்கிறேன்.அந்த இழப்பிலிருந்தே இன்னும் மீண்டு வர முடியவில்லை.நானும், தொழில்நுட்பக் கலைஞர்களும் பல நாள் பட்டினி தான்.சாப்பாடு இருந்தாலும் சாப்பிட முடியாது. 10000 வாட்ஸ் வெளிச்ச சூட்டில் உடம்பு வலி.அப்படியே படுத்து விடுவோம்.

 யாரிடமும் பச்சாதாபம் பெற்றுக் கொள்ளவோ,தியாகி பட்டம் பெறவோ,விருது வேண்டுமென்றோ நான் இதெல்லாம் சொல்லல.அப்படி நினைச்சிருந்தா 3 வருஷத்துக்கு முன்னயே எவ்வளவோ build up கொடுத்திருப்போம்.தினம் தினம் post போட்டு like அள்ளீருப்போம்.இந்திய அளவில் best nu award வாங்கியிருப்போம்.ஆனால் Apply கூட பண்ண விரும்பவில்லை.

ஒரே நோக்கம்... அரசுப்பள்ளிக் குழந்தைகள் ஆங்கிலத்தில் படிக்கணும்.டவுன்,தனியார் பள்ளிகளுக்கு இணையாக,அதை விட மேலாக நுனி நாக்கில் உச்சரிக்கணும்.அரசுக் கல்வித்துறையில் மாபெரும் மாற்றம் வரணும்னு தான் உழைத்தோம்.இதன் படப்பதிவு இயக்குநர் னு இப்ப நான் சொல்லித்தான் உங்களுக்கே  தெரியும்.இதற்கு முன் சொல்லப்படவும் இல்லை.நான் சொல்லிக் கொள்ளவும் இல்லை.எனக்கு எவ்வளவு முடியுமோ அதையும் மீறி இமை சோரா இமயம் ஏறியிருக்கிறேன்.இந்த வைராக்கிய வீரியத்தால் தான் அத்தனை ஆசிரியர்களும் ஒரு கட்டத்தில் சோர்வுற்ற போதும் இறுதிவரை அரணாய் உடனிருந்தார்கள்.

தியாகங்களாலும்,வலிகளாலும் கட்டப்பட்ட கோட்டை கண்ணெதிரே சரிந்து விடக் கூடாது என்ற வெறியில் தான் தினமும் இரவில் 3 மணி நேரம் செலவிட்டு type பண்ணி அனைவரும் அறியட்டும் என்று upload பண்ணுகிறேன்.விளம்பரத்திற்காக அல்ல.

யாருக்காக உருவாக்கினோமோ அவர்களுக்கு இதன் value தெரியவில்லை. பெரிய,பெரிய matriculation பள்ளிகள் தற்போது இப்பயிற்சி தருமாறு வேண்டுகிறார்கள்.

ஆபத்தான அழிவின் விளிம்பில் அரசுப் பள்ளிகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.முக நூலில் வெற்றி முகம் காட்டும் ஒரு சில பள்ளிகளைப் போல உள்ள கொஞ்சம் பள்ளிகள் தான் மாநில அளவில் கல்வித்திறன்,மாணவர் அக்கறை, தரம்,புதியன புகுதல் என்று புளகாங்கிதம் தந்து கொண்டிருக்கின்றன. மற்றவை கொஞ்சம் doubt தான்.

அதனால் தான் நமக்கு நாமே திட்டமாக இந்த phonetic method ஐ கையிலெடுப்போம். ஒவ்வொரு ஒன்றியத்திலும்
ஆர்வமுள்ளவர்கள், போராளிகள்,இலட்சிய வாதிகள்,சங்கப் பொறுப்பாளர்கள் முன்னெடுத்துச் செல்லுங்கள்.we support you in all the ways.

நிறையப் பேர் ஆர்வமாக DVD, word card books கேட்கிறார்கள். நாமே தயார் செய்வோம். மிக விரைவில் என்ன செய்யாலமென்று திசைகள் தீர்மானிப்போம்.அறிவிப்பு வரும்.அடுத்த ஆண்டு தொடக்கம் முதலே, திட்டமிட்ட கற்றல் விடியலாகட்டும்.

அரசின் திட்டம் தான் இது.நடைமுறைப் படுத்துதலில் நாமாக முன்வந்து முன்னிருப்போம்.

"வலிகள் வழிகளாகட்டும்"

அமலன் ஜெரோம்
படப்பதிவு இயக்குநர்VIDEOComments

Popular posts from this blog

வானவில் மன்றம் - Vanavil Mandram - Physics Experiment Videos - நீர் தெளிப்பான்

 

EE ENG Phonics Letter sounds Video - CRC : 03.12.2022 - Agenda & Training Video

 

SMC Facilitator - Video 1 - பள்ளி மேலாண்மைக் குழு செயலி - உள்நுழைதல்