Skip to main content
Send Your Study Materials, TLM, Videos, Articles To Aitpervai@gmail.com - Contact Us On 7200511868

ஆசிரியர்களைப் பற்றி பள்ளிக்கல்வி அமைச்சர் "நச்" பதில் - எவ்வளவு பாராட்டினாலும் பொருந்தும் - Video

 

சமீபத்தில் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். 


அப்போது ஒரு மாணவி அமைச்சரிடம் தாங்கள் எந்த பள்ளிக்கு ஆய்வு சென்றாலும் ஆசிரியர்களின் இருக்கையில் அல்லது தலைமை ஆசிரியர் இருக்கையிலோ ஏன் அமர்வதில்லை என்று கேள்வி எழுப்பினார்.


 அதற்கு பதில் அளித்த தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பின் மகேஷ் அவர்கள் "ஆசிரியர்கள் ஒரு தன்னலமற்ற பணி செய்பவர்கள் அவர்களுக்கு இணை வேறு யாரும் வர முடியாது,  எனது அரசியல் ஆசான்,  தமிழகத்தின் முதலமைச்சர் அவர்கள் ஒரு முறை பள்ளி ஆய்வுக்கு சென்ற போது கூட மாணவரின் இருக்கையில் அமர்ந்தாரே தவிர வேறு இருக்கையில் அமரவில்லை என்றும்,  அதன் வழி வந்த நானும் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பு அளிக்கிறேன்" என்றும் பதிலளித்தார்.


 இந்த பதில் ஆசிரியர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது இந்த அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் ஆசிரியர்களுக்கு இருந்த போதும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அவர்களின் பதில் ஆசிரியர் வட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 


Minister Video





Comments

Popular posts from this blog

"காக்கா முட்டை" - சிறார் திரைப்படம் - Direct Download Link

 

SMC Reconstruction - எவ்வாறு செய்வது மேற்கொள்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள Vide0

ஜூன் மாத சிறார் திரைப்படம் "The Little Princess" - Direct Download Link