என்னால் முடியும்... -------------------------------- முகநூலிலும்,வாட்ஸ் அப்பிலும் முகம் காட்டாத எத்தனையோ ஆசிரியப் பெருமக்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளுக்காய் சப்தமில்லாமல் கல்வியையும், பாசத்தையும் சரிவிகிதமாய் ஊட்டியபடி உயிர்த்துடிப்புடன் தன் பணியைச் செவ்வனே செய்து வருகின்றனர். ஆனால் இவர்களது பணியோ ,கடமையோ ஒரு கைதட்டல் கூட இல்லாத அங்கீகாரத்தோடு ஓய்வு பெற்று விடுவது தான் காலத்தின் கொடுமை. கல்வித் துறையின் கை தொடா நனவு.திறமையுள்ள இவர்களை உள்ளூர் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் தானே தனித்துவமும் ,சுயதிறமையும் உலகளாவிப் பரவும். இதையெல்லாம் பொருட்படுத்தாத இந்த ஆசிரியச் சொந்தங்கள் நொடி முட்களாய் தங்கள் பணியில் சுழன்று கொண்டேயிருக்கிறார்கள். Phonetics படப்பதிவுப் பணியில் ஐயப்பன் ஆசிரியர், முதல் 6 unit களை எடுத்த பின் 7 வது unit ஐ யார் முதலில் எடுப்பது என்ற கேள்வி ஒரு தயக்கமான தேடலாக அமைதி ஊர்வலம் நடத்தியது.நான் எடுக்கிறேன் சார் என்ற தைரியமான முதல் குரலுக்குச் சொந்தமான ஆசிரியர் தான் திருமதி.G,சித்ரா MSC,B.ed அவர்கள். ஆழ்ந்த நுட்பம், ஆரவாரமில்லா அணுகுமுறை, தெளிவான முன்நகர்வு எ...